உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாய்களை கட்டுப்படுத்த கோரி மனு வழங்கல்

நாய்களை கட்டுப்படுத்த கோரி மனு வழங்கல்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில், தெரு நாய்களை கட்டுப்படுத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், நகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பொதுமக்களையும், கால்நடைகளையும் தெரு நாய்கள் கடித்து வருவது அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, நாய்க்கடிக்கு பலர் சிக்கியுள்ளனர். இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் ஆசிக், மாவட்ட செயலர் தோட்டம் யாசர், இளைஞரணி மாநில இளைஞர் அணி அமைப்பாளர் முகமது இர்ஷாத், நகர தலைவர் ஹாஜியார் ஆகியோர் பள்ளப்பட்டி நகராட்சி கமிஷனர் ஆர்த்தியிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை