உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம்கேட்டு கரூர் கலெக்டரிடம் மனு

ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம்கேட்டு கரூர் கலெக்டரிடம் மனு

கரூர்:கணபதிபாளையம் ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் தான்தோன்றிமலை கணபதிபாளையத்தில் உள்ள ரேஷன் கடை, 25 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு மனை பிரிவு அமைக்கும் போது, பொது பயன்பாட்டுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதில், மாநகராட்சி சார்பில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் மீதமுள்ள இடத்தில், ரேஷன் கடைக்கு கட்டடம் கட்ட முடியும். எனவே, அந்த இடத்தில் ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ