உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர், புகழூரில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்

கரூர், புகழூரில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்

கரூர், புகழூரில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்கரூர், டிச. 25-கரூர் மாவட்ட பா.ம.க., சார்பில், மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, 1,000 நாட்கள் ஆன நிலையில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்தும், வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேஷ் உள்பட, பலர் பங்கேற்றனர்.* புகழூர் பா.ம.க., சார்பில், தாசில்தார் அலுவலகம் முன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பசுபதி தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக்கோரி, கோஷங்கள் எழுப்பபட்டன. மாவட்ட அமைப்பு செயலாளர் குணசீலன், நகர செயலாளர் அப்துல் கனி, முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ், பிரேம்நாத் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை