உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிரின்டிங் பிரஸ் அதிபர் வீட்டில் திருட்டு கணவன், மனைவிக்கு போலீஸ் வலை

பிரின்டிங் பிரஸ் அதிபர் வீட்டில் திருட்டு கணவன், மனைவிக்கு போலீஸ் வலை

கரூர்: கரூரில், பிரின்டிங் பிரஸ் அதிபர் வீட்டில் தங்க நகை, பணத்தை திருடியதாக கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர், 43; பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். கடந்த பிப்., 25ல் சுதாகர் வீட்டில் பிறந்த நாள் விழா நடந்தது. அப்போது, வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த, 13 பவுன் தங்க நகை, ஏழு லட்ச ரூபாயை காணவில்லை. இதுகுறித்து, சுதாகர் கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். பிறகு, போலீசார் நடத்திய விசாரணையில், தங்க நகை, பணத்தை திருடியது, பிறந்த நாள் விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் பார்த்திபன், 27; அவரது மனைவி சங்கரி, 24; என தெரிய வந்தது.இதையடுத்து, இரண்டு பேரையும் கரூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை