உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அனுமதி இன்றி மறியல் போலீசார் வழக்கு பதிவு

அனுமதி இன்றி மறியல் போலீசார் வழக்கு பதிவு

குளித்தலை, குளித்தலை அடுத்த கொசூர் பகுதியில் நேற்று முன்தினம் மதியம், கம்பளியாம்பட்டி வடக்கு காலனி தெருவில், பட்டியல் பிரிவினருக்கு மயானத்திற்கு பாதை அமைக்க கோரி அனுமதியில்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியது. பலமுறை எச்சரிக்கை செய்தும் கண்டு கொள்ளாமல் சாலை மறியலில் ஈடுபட்ட வெள்ளியணை சுப்பிரமணி, கோவிந்தராஜ், கொசூர் அஜித்குமார், சண்முகம் மற்றும் பலர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ