உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளியில் அஞ்சலக வங்கி கணக்கு துவக்கும் முகாம்

பள்ளியில் அஞ்சலக வங்கி கணக்கு துவக்கும் முகாம்

அரவக்குறிச்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு, சேமிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அஞ்சலக வங்கி கணக்கு துவக்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.தமிழக அரசு, மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி அதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. மாணவர்களுக்குரிய கல்வி உதவித்தொகை, நேரடியாக அவருடைய வங்கிக் கணக்கில் சேர்க்கும் பொருட்டு, தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் வங்கிக்கணக்கு துவக்குவதற்காக அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேற்று அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அஞ்சலக வங்கிக்கணக்கு துவங்கும் நிகழ்வு நடந்தது. தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தொடங்கி வைத்தார். அரவக்குறிச்சி அஞ்சலகத்திலிருந்து சண்முகவேல், பெரியண்ணன், வைரமணி, கோபிகா ஆகியோர், மாணவர்களுக்கு கணக்கு துவங்குவதற்கான பணிகளை செய்தனர். பட்டதாரி ஆசிரியர் சகாயவில்சன், ஷகிலா பானு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். சிறப்பு முகாமில், 53 மாணவர்கள் வங்கிக்கணக்கு துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்