உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, தை மாத பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் அபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகமாலீஸ்வரர் கோவிலில், நேற்று தை மாத பிரதோஷ விழா நடந்தது. அதில், நந்தி சிலைக்கு அபி ேஷகம் நடந்தது. பிறகு, தை மாத பிரதோஷத்தை யொட்டி, மூலவர் மேகமாலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.* குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் கந்தசுப்பிரமணிய குருக்கள் சிறப்பு அபிஷேகம் செய்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.* குளித்தலை கடம்பவனேஸ்வரர், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், குளித்தலை மீனாட்சிசுந்தரேஸ்வர், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் நதிஈஸ்வரர், சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட பகுதி சிவாலங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி