உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த தனியார் நிறுவன ஊழியர் மீட்பு

ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த தனியார் நிறுவன ஊழியர் மீட்பு

கரூர்: திண்டுக்கல்லை சேர்ந்தவர் பழனிசாமி, 54; கரூர் அருகே சோமூர் அமராவதி ஆற்றில் உள்ள, தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்த-மான நீரேற்று நிலையத்தில், பம்ப் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பணிக்கு சென்றார். நேற்று அதிகாலை அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்-தது. நீரேற்று நிலையத்தை சுற்றி தண்ணீர் சென்றது. வேகம் அதி-கரித்து காணப்பட்டதால், நேற்று காலை கரைக்கு திரும்ப முடி-யாமல் தவித்தார்.இதுகுறித்து மொபைல் போனில் சிமென்ட் ஆலை நிர்வாகத்-துக்கு தகவல் கொடுத்தார். அவர்களின் தகவலின்படி சென்ற கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கயிறு கட்டி பத்திரமாக மீட்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி