மேலும் செய்திகள்
கலெக்டரிடம் மாற்றுத்திறனாளி கண்ணீர்
11-Sep-2024
கரூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று இடங்களில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கோவை சித்தாபுதுாரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு முகாம் வரும், 28ல் நடக்கிறது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கரூர் மாவட்டம் என்ற முகவரியில் நேரடியாகவோ, அலுவலக தொலைபேசி எண்: 04324- 257130-, தபால் மூலமாகவோ, -gmail.comஇ.மெயில் மூலமாகவோ சுய விவரம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை விபரம் மற்றும் கல்வி தகுதி குறித்த விவரங்களை வரும் 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும், வெண்ணைமலையில் உள்ள கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும், 20 காலை 10:00 முதல் 3:00 மணி வரையும், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வரும், 25 காலை 10:00 முதல் 3:00 மணி வரையும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
11-Sep-2024