உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான நிலையில் பொது சுகாதார வளாகம்

மோசமான நிலையில் பொது சுகாதார வளாகம்

கிருஷ்ணராயபுரம் வல்லம் சுகாதார வளாகம் மோசமாக இருப்பதால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து, வல்லம் கிராமத்தில் பொது சுகாதார வளாகம் உள்ளது. தற்போது கதவுகள் மற்றும் தண்ணீர் வரும் குழாய்கள் உடைந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வளாகத்தின் வெளிப்புறத்தை சுற்றி அதிகமான செடிகள் வளர்ந்துள்ளன. மேலும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. மக்கள் அச்சத்துடன் வளாகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, வளாகத்தை துாய்மைப்படுத்தி சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை