மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 435 மனுக்கள் வழங்கல்
30-Sep-2025
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்க வேல் தலைமையில் நேற்று நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடன்கள், பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 318 மனுக்கள் வரப்பெற்றன. பின்னர், கரூர் கேலோ இந்தியா ஜூடோ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவி ஸ்ரீனா, ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்த தேசிய அளவிலான ஜுடோ சாம்பியன்சிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். அவருக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.மேலும், மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான ஜூடோ மற்றும் மேசை பந்து போட்டிகளில் பள்ளி பிரிவுகளில் முதல், 3 இடம் பிடித்து வெற்றி பெற்ற 14 மாணவ, மாணவியரும், மாற்றத்திறனாளிகளுக்கான இறகுப் பந்து போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த மாணவிக்கும், மனவளர்ச்சி குன்றியோருக்கான தடகளம் 100 மீட்டர் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த மாணவன் உள்பட மொத்தம், 18 மாணவ, மாணவியருக்கு, 10.75 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.கூட்டத்தில் குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, கரூர் சப்-கலெக்டர் பிரகாசம், உதவி ஆணையர் கலால் முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Sep-2025