சிறந்த பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசு
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடன், பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளாக, 364 மனுக்கள் வரப்பெற்றன.தொடர்ந்து, சிறந்த பால் உற்பத்தியாளர் சங்கமான குப்பகவுடன்வலசு சங்கத்திற்கு முதல் பரிசு, பாராட்டு சான்றிதழையும், தரகம்பட்டி சங்கத்திற்கு இரண்டாவது பரிசு, கருங்கல்பட்டி சங்கத்திற்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது. சிறந்த செயலாளர்களராக முதல் பரிசு செல்லாண்டிபுரத்துக்கும், இரண்டாம் பரிசு, கருங்கல்பட்டி சங்க செயலாளருக்கும், மூன்றாவது பரிசு குப்பகவுடன்வலசு சங்க செயலாளருக்கு வழங்கப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சக்திபாலகங்காதரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், ஆவின் பொது மேலாளர் பிரவீனா உள்பட பலர் பங்கேற்றனர்.