மேலும் செய்திகள்
மின் மயானம் திறப்பு எப்போது
21-Oct-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த கொசூர் பஞ்., கம்பளியாம்பட்டி பட்டியல் பிரிவை சேர்ந்த பிச்சைமுத்து என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். தற்போது வரை, கம்பளியாம்பட்டி பட்டியல் பிரிவு ஊர் மக்கள், இறந்தவரின் சடலத்தை பட்டா நிலம் வழியாக மயானத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில், பட்டா நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டுள்ளதால் இறந்து போன பிச்சை முத்துவின் சடலத்தை, அங்குள்ள வாரி வழியாக மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது.தற்போது வாரியில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால், சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேற்று மதியம். 3:00 மணியவில் தோகைமலை-தரகம்பட்டி நெடுஞ்சாலையில், கொசூரில் மயானத்திற்கு செல்ல நிரந்தர பாதை கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்டவர்களிடம் கடவூர் தாசில்தார் ராஜாமணி, கிருஷ்ணாபுரம் ஒன்றிய ஆணையர் முருகேசன், தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 4 மாதங்களுக்குள் பொது பாதையுடன் மயானம் அமைத்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு, வீட்டிலிருந்த இறந்தவரின் உடலை எடுத்துச் சென்று, மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
21-Oct-2025