உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிந்தலவாடி பஞ்.,அலுவலகம் முன் தலைவர் தலைமையில் போராட்டம்

சிந்தலவாடி பஞ்.,அலுவலகம் முன் தலைவர் தலைமையில் போராட்டம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட, சிந்தலவாடி பஞ்சா-யத்து அலுவலத்தில் பணிபுரிந்த பஞ்சாயத்து செயலாளர் ராஜரத்-தினம், வேறு பஞ்சாயத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, அருகில் உள்ள பஞ்., செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதுவரை பொறுப்பு பஞ்சா-யத்து செயலாளர் பணிக்கு வரவில்லை. இதனால் பணிகளில் முடக்கம் ஏற்பட்டு கடந்த, 45 நாட்களாக நிர்வாகம் சம்பந்தமான பணிகள் எதுவும் செய்ய முடியவில்லை.துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டு, யூனியன் நிர்வா-கத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்க-வில்லை.இதையடுத்து நேற்று சிந்தலவாடி பஞ்., தலைவர் வெண்ணிலா, துணைத் தலைவர் அகிலா மற்றும் வார்டு உறுப்பி-னர்கள், 12 பேர் பஞ்சாயத்து அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, யூனியன் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், நேரில் வந்து தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் பேசினார். இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும். அதன் பிறகு பஞ்சாயத்து செயலாளரை மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதன் பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை