கரூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூரில் வணிகர் சங்கங்களின்பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்கரூர், டிச. 10-தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் ராஜூ தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், மத்திய பா.ஜ., அரசு வாடகை கடைகளுக்கு விதித்த, 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.துணைத்தலைவர்கள் பால்ராஜ், லோகநாதன், பழனிசாமி, செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட, பலர் பங்கேற்றனர்.