மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
25-Sep-2025
கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், துாய்மை காவலர்களுக்கு ஊராட்சி நிதியில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து பிரிவு தொழிலாளர்களையும் தரம் உயர்த்தி சட்டபூர்வமாக உரிமைகள் வழங்க வேண்டும். மூன்று மாத ஊக்கத்தொகையாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஏழாவது ஊதியக்குழு ஊதியம் வழங்குவதுடன், நிலுவை தொகையையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.துணைத்தலைவர்கள் ஜீவானந்தம், ராஜாமுகமது, நிர்வாகிகள் சுப்பிரமணியன், கிருஷ்ண மூர்த்தி, கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
25-Sep-2025