உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில், வெண்ணைமலை தொழிலாளர் நல அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ், 7,000 ரூபாய் வழங்க வேண்டும். மத்திய அரசின் தொழிலாளர் தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு, ஒரே மாதிரியான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில தலைவர் சிவ சங்கரி, பொதுச்செயலாளர் முனியப்பன், செயலாளர்கள் கலா, ராதிகா, மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை