மேலும் செய்திகள்
கல்வி உபகரணம் வழங்கல்
07-Oct-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டம் ஆசனுார் ஊராட்சி புதுதொட்டி, கெத்தேசால், மாவள்ளம், தேவர்நத்தம், புதுக்காடு, சோக்கிதொட்டி மற்றும் தலமலை ஊராட்சி இட்டரை, தடசலட்டி ஆகிய எட்டு கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கெத்தேசால் கிராமத்தில், எலக்ட்ரிக்கல் இன்ஸ்டலேஷன் இன்ஜினியர் வெல்பேர் அசோசியேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. ரீடு நிறுவன திட்ட மேலாளர் பழனிச்சாமி வரவேற்றார். அசோசியேஷன் செயலாளர் மணிகண்டன் தொடக்க உரையாற்றினார். பொருளாளர் செல்வராஜ் வாழ்த்தினார்.சிறப்பு விருந்தினர்களாக ஆசனுார் ஈக்கோ ரேஞ்சர் பிரகாஷ், கேர்மாளம் ரேஞ்சர் வெங்கடாசலம், சத்தி மகளிர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, ஆசனுார் எஸ்.ஐ.,குமணவேந்தன் மற்றும் ரீடு நிறுவன இயக்குநர் கருப்புசாமி கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் புத்தகப்பை, கலர் பென்சில், ஜியோமெட்ரிக் பாக்ஸ், குடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், 91 பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் ரீடு நிறுவன ஆவண அலுவலர் பூந்தமிழன், திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட, 150-கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ரீடு நிறுவன திட்ட அலுவலர் சரவணகுமார் நன்றி தெரிவித்தார்.
07-Oct-2025