உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
கரூர், கரூர் அருகே, வாங்கல், ஆண்டாங்கோவில்புதுார் பகுதிகளில், நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, மகளிர் திட்டத்தின் சார்பில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் இருவருக்கு அமுத சுரபி கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு, 1.15 லட்சம் ரூபாய் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர், ஒருவருக்கு ஊன்றுகோல்.கூட்டுறவுத்துறை சார்பில், ஒன்பது பேருக்கு, 8.20 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடு பராமரிப்பு கடனுதவி, தோட்டக்கலைத்துறை சார்பில், நான்கு பேருக்கு காய்கறி தொகுப்பு, வருவாய்த் துறை சார்பில், ஏழு பேருக்கு பட்டா மாறுதல் என மொத்தம், 37 பயனாளிகளுக்கு, 12.35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முகாமில் டி.ஆர்.ஓ., கண்ணன், ஆர்.டி.ஓ., முகமது பைசல், தாசில்தார் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.