மேலும் செய்திகள்
தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
22-Sep-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த தண்ணீர்பள்ளியில் செயல்பட்டு வரும், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில், நேற்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 50 நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தியாகராஜன் தலைமை வகித்தார்.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் குளித்தலை ஐஸ்வர்யா, கிருஷ்ணராயபுரம் சுதா காவேரி, தோகைமலை கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 50 பயனாளிகளுக்கு குளித்தலை தி.மு.க., - எம்.எல்.ஏ., மாணிக்கம் நடமாடும் காய்கனி வண்டிகளை வழங்கினார்.தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சந்திரன், தியாகராஜன், கதிரவன் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
22-Sep-2025