உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாங்கல் சாலை பிரிவில் நிழற்கூடம் அமைக்க பொது மக்கள் கோரிக்கை

வாங்கல் சாலை பிரிவில் நிழற்கூடம் அமைக்க பொது மக்கள் கோரிக்கை

கரூர் :கரூர் அருகே, வாங்கல் சாலை பிரிவில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் அருகே, வளர்ந்து வரும் பகுதியாக வாங்கல் பிரிவு சாலை உள்ளது. மேலும், கரூரில் இருந்து வாங்கல் பிரிவு சாலை வழியாக நாமக்கல் மாவட்டம், மோகனுார், வாங்கல், நெரூர், திருமுக்கூடலுார், பசுபதிபாளையம், தொழிற்பேட்டை, சணப்பிரட்டி, மேலப்பாளையம், கொளந்தானுாருக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.இதனால், கரூர் வாங்கல் சாலை பிரிவில் போக்குவரத்து எப்போதும் பிஸியாக இருக்கும். கோடை காலங்களில், வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வாங்கல் சாலை பிரிவில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொது மக்கள், அவதிப்படுகின்றனர். மழை காலத்தில், நிழற்கூடம் இல்லாததால் பஸ் ஸ்டாப்பில் உள்ள கடைகளை தேடி பொதுமக்கள் ஓடும் நிலை உள்ளது.எனவே, வாங்கல் சாலை பிரிவு பஸ் ஸ்டாப்பில் பொதுமக்கள் வசதிக்காக, நிழற்கூடம் அமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !