உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளி முன் சேதமடைந்த குழாய் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பள்ளி முன் சேதமடைந்த குழாய் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூர், கரூர் அருகே, அரசு பள்ளி முன் சேதமடைந்த நிலையில் உள்ள, போர்வெல் குழாயை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம், கோம்புபாளையம் பஞ்சாயத்து, நொய்யலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில், ஏராளமான வீடுகள் உள்ளன. இந்நிலையில், தொடக்கப்பள்ளிக்கு முன் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் வசதிக்காக, போர்வெல் குழாய் அமைக்கப்பட்டது. தற்போது, அந்த குழாய் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், குடிநீர் வீணாகிறது.மேலும், குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர் பள்ளி முன் தேங்கி, சுகாதார சீர்கேடு மற்றும் கொசு உற்பத்தியை ஏற்படுத்துகிறது. இதனால், மாணவ, மாணவியருக்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நொய்யல் அரசு தொடக்கப்பள்ளி முன் உள்ள, உடைந்த போர்வெல் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை