உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்

கரூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்

கரூர், கரூர் அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டியில் மின் மோட்டார் பழுது காரணமாக, வினியோகம் இல்லை என கூறி, பொதுமக்கள் நேற்று குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்., யூனியன், ஜெகதாபி பஞ்சாயத்து பொரணி தெற்கு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்பாட்டுக்காக, அந்த பகுதியில் இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக மின் மோட்டார் பழுது காரணமாக, குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறி, நேற்று காலை பொதுமக்கள் காலி குடங்களுடன், பொரணி தெற்கு சாலையில், அரசு பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.உடனடியாக, தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, மின் மோட்டார் பழுது சரி செய்யப்பட்டு, குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.இதையடுத்து, சிறை பிடிக்கபட்ட அரசு பஸ்சை பொதுமக்கள் விடுவித்து, மறியலை கைவிட்டனர். இதனால், பொரணி தெற்கு பகுதியில் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ