| ADDED : ஜூன் 08, 2024 02:53 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., பரளி ஆர்.பி.ஆர்., தோட்டம் மேலவயலில் கடந்த, 5 நாட்களாக பெய்த மழை காரணமாக, 7 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த அல்வா பூசணிக்காய்கள் நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயி வேதனை அடைந்துள்ளார்.குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., பரளி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்சிங். 45. இவர், தனக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். தண்ணீர் வசதி இல்லாததால், அல்வா பூசணிக்காய் பயிரிட்டார். குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் நிலங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.விவசாயி மோகன் சிங் பயிரிட்ட நிலத்தில் மழைநீர் தேங்கியதால் அல்வா பூசணிக்காய் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகியது. ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை செலவு செய்த நிலையில், 7 ஏக்கர் நிலத்தில் இருந்த பூசணிக்காய்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகியதால், 7 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.மழை தண்ணீர் வெளியேற வடிகால் இல்லாததால், அதிகாரிகள் பயிரிடப்பட்ட அல்வா பூசணி நிலத்தை நேரில் ஆய்வு செய்து, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார்.