உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை; குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி

கரூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை; குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்-தது.தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை யொட்-டியுள்ள, லட்சத்தீவு பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு, சுழற்சி காரணமாக தமிழகத்தில், பல மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. நேற்று காலை முதல், கரூர் மாவட்டத்தின் பல இடங்களில் வானம் மேகமூட்டமாக இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை, 4:30 முதல், 5:00 மணி வரை கரூர் நகர், சுங்ககேட், தான்தோன்றி-மலை, காந்தி கிராமம், கொளந்தானுார், பசுபதி-பாளையம், சர்ச் கார்னர், வெங்கமேடு, வெண்-ணைமலை, திருமாநிலையூர், திருகாம்புலியூர், ராமானுார், சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்றால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.* அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3:00 மணியளவில் வானம் இருண்டு மழை பெய்யத் தொடங்கியது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் அர-வக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சிய-டைந்தனர். மேலும் மாலையில் பெய்த மழையால், பள்ளியை விட்டு வீட்டிற்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ