உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி அருகே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டுகோள்

அரவக்குறிச்சி அருகே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டுகோள்

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, வெஞ்சமாங்கூடலுார் குடகனாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி அருகே உள்ளது வெஞ்சமாங்கூடலூர். இவ்வூரில் பிரசித்தி பெற்ற கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். கோவிலுக்கு மற்றும் வெஞ்சமாங்கூடலுார் செல்ல வேண்டுமானால், கோவில் அருகில் உள்ள குடகனாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். ஆற்றை கடக்க தரைமட்ட பாலம் வழியாகச்செல்ல வேண்டும். இந்த ஆற்றில் மழை காலங்களில் தண்ணீர் வரும்போது, தரைமட்ட பாலத்தில் தண்ணீர் வழிந்தோடும்.அந்த நேரத்தில் பொதுமக்கள் வெஞ்சமாங்கூடலுார் மற்றும் கோவிலுக்கு செல்ல மிகவும் அவதிப்படுவர். மேலும் விவசாய பொருட்களை விற்பனைக்கு, அரவக்குறிச்சி மற்றும் கரூர் எடுத்துச் செல்ல, தரைமட்ட பாலத்தை தான் கடந்து செல்ல வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, வெஞ்சமாங்கூடலுார் குடகனாற்றில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ