மேலும் செய்திகள்
சாலையை அகலப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள்
26-Jun-2025
அரவக்குறிச்சி, கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, இடையகோட்டை, ஈசநத்தம், சின்னதாராபுரம் பகுதி பொதுமக்கள், பல்வேறு மாநிலங்களில் தொழில் செய்வதால், இவர்களில், 99 சதவீதம் பேர் ரயில் பயணத்தையே பிரதானமாக மேற்கொள்கின்றனர். ஆனால், இவர்கள் கரூர், திண்டுக்கல், ஈரோடு போன்ற நகரங்களுக்கு சென்று தான் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர்.இதனால், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வழியாக புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரவக்குறிச்சியில் இருந்து, 35 கி.மீ., துாரத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் ரயில் வசதி உள்ளது. எனவே, பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி வழியாக கரூருக்கு ரயில் பாதை அமைத்தால், இப்பகுதி மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.எனவே, மக்களின் நலன் கருதி பழனியில் இருந்து கரூர் வரை ஒட்டன்சத்திரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வழியாக புதிய ரயில்வே வழித்தடம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26-Jun-2025