ராமனுாரில் ஆபத்தான வளைவு வேகத்தடை அமைக்க கோரிக்கை
கரூர், ஆபத்தான வளைவு சாலையில், வேகத்தடை அமைக்க வேண்டும்.கரூர்-, தெரசா கார்னர் பகுதியில் இருந்து மருத்துவக் கல்லுாரி, பசுபதி பாளையம், வடக்கு காந்திகிராமம் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கொளந்தானுார், ராமானுார் வழியாக சென்று வருகின்றன. ராமானுார் அருகே, மிக ஆபத்தான வளைவு பாதை உள்ளது. இருசக்கர வாகனங்கள் அதிகளவு இந்த சாலையில் செல்கிறது. இங்கு, அம்மன் பகுதிக்கு சாலை பிரிகிறது. இந்த வளைவு சாலையில், அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இங்கு, வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.