உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவிரி கிளை வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற கோரிக்கை

காவிரி கிளை வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற கோரிக்கை

கரூர், கரூர் அருகே காவிரியாற்றின், கிளை வாய்க்காலில் முளைத்துள்ள, ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டூர் அணையில் இருந்து, கரூர் மாவட்ட சம்பா சாகுபடிக்காக, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், காவிரி ஆற்றுப்பகுதியில் நெல் சாகுபடி பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது.அடுத்த கட்ட உரம் இடுதல், களை எடுத்தல் உள்ளிட்ட பணி நடப்பதால், மேட்டூர் அணையில் இருந்து, குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், கரூர் அருகே புகழூர் வழியாக செல்லும், காவிரியாற்றின் கிளை வாய்க்காலில், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை அதிகளவில் தேங்கியுள்ளன.மேலும், ஆகாய தாமரை செடிகளும் வாய்க்காலில் முளைத்து, படர்ந்துள்ளது. இதனால், நீரோட்டம் தடைபட்டுள்ளது. எனவே, காவிரியாற்றின் பாசன கிளை வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை மற்றும் ஆகாயதாமரை செடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை