உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 35 பேருக்கு காப்பு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 35 பேருக்கு காப்பு

கரூர்: கரூர் அருகே, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கரூர் மாவட்ட கிளை சார்பில், காருடையாம்பாளையம் கிழக்கு தெரு அருந்த-தியர் சமூக மக்களின் மயான பயன்பாட்டு நிலத்தை, உத்தரவாதம் செய்யக்கோரியும்; குறிப்பிட்ட இடத்தில் பயன்பாட்டை தடுப்ப-வர்கள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்ப-திவு செய்யக்கோரியும், புகழூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்-பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்த வேலாயுதம்பாளையம் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் முத்துச்செல்வன் தலைமையில், புகழூர் தாலுகா அலுவலகம் முன், நேற்று அறிவித்தபடி ஆர்ப்-பாட்டம் நடந்தது. இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, கரூர் ஒன்றிய மா.கம்யூ., செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, கந்தசாமி, ராஜேந்திரன், சரவணன் உள்பட, 35 பேரை வேலாயுதம்பா-ளையம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !