உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனநிலை சரியில்லாதவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

மனநிலை சரியில்லாதவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

மனநிலை சரியில்லாதவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்புகுளித்தலை, செப். 26-குளித்தலை அடுத்த தெலுங்குப்பட்டியில், 30 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர், அரைகுறை ஆடைகளுடன், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதுகுறித்து, அப்பகுதி மக்கள், சாந்திவனம் மனநல காப்பகத்திற்கும், தோகைமலை போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சாந்திவனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா, மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட மீட்பு குழுவினர், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த நபரை மீட்டு, திருச்சி, தில்லைநகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை