உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 2வது நாளாக வருவாய் துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

2வது நாளாக வருவாய் துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

2வது நாளாக வருவாய் துறையினர்தொடர் காத்திருப்பு போராட்டம்குளித்தலை, நவ. 28-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.குளித்தலை தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை, 10:00 மணியளவில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்ட செயலாளரும், குளித்தலை தலைமையிடத்து துணை தாசில்தாருமான ஜெயவேல் காந்தன் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், கடந்த இரு நாட்களாக பணி புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் மகாமுனி, தலைமையிடத்து தாசில்தார் வைரபெருமாள், தனி தாசில்தார் மதியழகன், டி.எஸ்.ஓ., நீதிராஜன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.இதேபோல் கிருஷ்ணராயபுரம், கடவூர் தாலுகா அலுவலகங்களிலும் பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை