உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளப்பட்டியில் சரி செய்யப்படாத குடிநீர் குழாயால் தொற்று அபாயம்

பள்ளப்பட்டியில் சரி செய்யப்படாத குடிநீர் குழாயால் தொற்று அபாயம்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட, 10வது வார்டில் சரி செய்யப்படாத குடிநீர் குழாயால் நகராட்சி ஊழியர்களை, பெண் கவுன்சிலர் திட்டியது வைரலாகி வருகிறது.பள்ளப்பட்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. 10வது வார்டு கவுன்சிலராக தி.மு.க.,வை சேர்ந்த வஹிதா பானு உள்ளார். இங்குள்ள சொட்டல் தெருவில், சாக்கடையில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீருடன் கலக்கிறது. இதை சரி செய்து தரும்படி, நகராட்சி அதிகாரிகளிடம் வஹிதா பானு பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், அதிகாரிகள் செவி சாய்க்காமல், கிடப்பில் போட்டுள்ளனர்.இது குறித்து கவுன்சிலரிடம், பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். இந்நிலையில், குடிநீர் குழாய்க்கு மேல் டயர் டியூப்பை இழுத்து கட்டி விட்டு, நகராட்சி ஊழியர்கள் சென்றுள்ளனர். குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் இப்பகுதி மக்களுக்கு, தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கவுன்சிலர், 'நகராட்சி அதிகாரிகளை போன் போட்டு திட்டி தீர்க்கும் வீடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி