கரூர்-மதுரை சர்வீஸ் சாலையில் தேங்கிய குப்பை இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்
கரூர், டிச. 19-கரூர்-மதுரை சர்வீஸ் சாலையில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவுவதை தடுக்க, கழிவுகளை அகற்ற வேண்டும்.கரூர் திருகாம்புலியூர் ரவுண்டானா அருகே, மதுரைக்கு சர்வீஸ் சாலை செல்கிறது. கரூரில் இருந்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட, தென் மாவட்டங்களுக்கு, அந்த சர்வீஸ் சாலை வழியாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.சர்வீஸ் சாலையில் இரவு நேரங்களில், குப்பை, இறைச்சி கழிவுகளை, வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். அதை, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., நிர்வாகம் நாள்தோறும் அகற்றுவது இல்லை.இதனால், தேங்கியுள்ள குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் திருகாம்புலியூர் ரவுண்டானா பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மதுரை சர்வீஸ் சாலையில் தேங்கியுள்ள குப்பை, இறைச்சி கழிவுகளை அகற்ற, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.