உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோரம் முட்புதர் அகற்றும் பணி விறுவிறு

சாலையோரம் முட்புதர் அகற்றும் பணி விறுவிறு

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட பகுதிகளில், சாலையில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றும் பணி நடந்தது.தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, அரவக்குறிச்சி நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட மாநிலம் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளில் வளர்ந்து முட்செடிகளை அகற்றும் பணி நடந்தது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், இப்பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனோர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !