உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கள்ளப்பள்ளி பஞ்சாயத்தில் கிராமப்புற மதிப்பீடு பயிற்சி

கள்ளப்பள்ளி பஞ்சாயத்தில் கிராமப்புற மதிப்பீடு பயிற்சி

கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி பஞ்.,ல் தனியார் வேளாண்மை கல்லுாரி மாணவியர், கிராமப்புற மதிப்பீடு கள பயிற்சியில் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், முசிறி தனியார் வேளாண்மை கல்லுாரி மாணவியர், கிராமங்களில் தங்கி வேளாண்மை சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கள்ளப்பள்ளி பஞ்., கிராம வரைபடம், வளம், கிராம மக்களின் மதிப்பீடு குறித்து பயிற்சி எடுத்தனர். இதில், பஞ்., தலைவர் சக்திவேல், கிராமங்களின் வளர்ச்சி பற்றி விரிவாக எடுத்து கூறினார். மேலும், லாலாப்பேட்டை விவசாயிகளின் வளர்ச்சி பற்றியும் கூறினார். கல்லுாரி மாணவியர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி