உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஞ்சப்பட்டி பகுதியில் கம்பு அறுவடை பணி

பஞ்சப்பட்டி பகுதியில் கம்பு அறுவடை பணி

கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி பகுதியில், கம்பு அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, போத்துரவூத்தன்பட்டி, வடுகப்பட்டி, திருமேனியூர், மலையாண்டிப்பட்டி, கொசூர், குளத்துார், கணக்கப்பிள்ளையூர், வீரியபாளையம் ஆகிய பகுதிகளில் கம்பு சாகுபடி செய்துள்ளனர்.கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. விளைச்சல் அடைந்து, தயார் நிலையில் உள்ள கம்புகளை விவசாயிகள் அறுவடை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இந்த பகுதியில், 25 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை