உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபட்டில் மணல் கடத்தியவர் கைது; இருவர் தலைமறைவு

மொபட்டில் மணல் கடத்தியவர் கைது; இருவர் தலைமறைவு

குளித்தலை மொபட்டில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.குளித்தலை எஸ்.ஐ., மணி சேகர் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை, கோட்டைமேடு ஐநுாற்றுமங்களம் ராணி மங்கம்மாள் சாலை பிரிவு அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வளையப்பட்டி நடு குடித்தெருவை சேர்ந்த வினோத்குமார், 33, என்பவர், பதிவு எண் இல்லாத டிவிஎஸ் சூப்பர் மொபட்டில், நான்கு மணல் மூட்டைகளுடன் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து திருடி சென்று வந்துள்ளார்.அவரை பிடித்து விசாரித்ததில், குளித்தலை அண்ணாநகர் மணிகண்டன், மணத்தட்டை பிரதீப் ஆகியோர் உதவியுடன் மணல் திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, குளித்தலை போலீசார் வினோத் குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி