உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கடத்தல்: 2 பேர் மீது வழக்கு

மணல் கடத்தல்: 2 பேர் மீது வழக்கு

குளித்தலை: குளித்தலை நகராட்சி நாப்பாளையம் காவிரி ஆற்றுப்படுகையில், இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் மணல் கடத்துவதாக வந்த தகவல்படி, நேற்று முன்தினம் அதிகாலை, குளித்தலை எஸ்.ஐ., சிங்காரம் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சுங்ககேட்டை சேர்ந்த கணேசன், 49, என்பவர், 'ஹோண்டா சைன்' டூவீலரிலும், மற்றொருவர், 'ஹீரோ ஸ்பிளண்டர்' டூவீலரிலும், காவிரி ஆற்றில் இருந்து மணல் அள்ளி சாக்கு மூட்டைகளில் கட்டி வண்டியில் வைத்து கடத்த முயன்றனர். அப்போது போலீசார் அங்கு வருவதை கண்டு, டூவீலர்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இரு டூவீலர்களையும் பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ