உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புன்னம் அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டடம் திறப்பு

புன்னம் அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டடம் திறப்பு

கரூர், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட புன்னம் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை, சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இங்கு, தாட்கோ மூலம் புன்னம் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில், 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. தரை தளத்தில், 151.31 ச.மீ. பரப்பளவிலும், முதல் தளம், 30.91 ச.மீ. பரப்பளவிலும் என, மொத்தம், 181.22 ச.மீ. பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில், அறிவியல் ஆய்வகமும், பதிவேடுகள் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறையும் அமைந்துள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் பாடங்களை சிறந்த முறையில் கற்பிப்பதற்கு ஏதுவாக செராமிக் கிரின் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய கல்வி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக கப்போர்டு அமைத்து தரப்பட்டுள்ளது. கலெக்டர் தங்கவேல், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சக்திபாலகங்காதரன், தாட்கோ உதவி பொறியாளர் வைஷ்ணவி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி