உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகையிலை பொருட்கள், கேரி பேக் பறிமுதல்

புகையிலை பொருட்கள், கேரி பேக் பறிமுதல்

புகையிலை பொருட்கள்,கேரி பேக் பறிமுதல்அரவக்குறிச்சி, நவ. 19-அரவக்குறிச்சியில் நடந்த சோதனையில், 20 கிலோ புகையிலை பொருட்கள், 35 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட கடைகளில், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, பல்வேறு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 20 கிலோ புகையிலை பொருட்கள், 35 கிலோ பிளாஸ்டிக் (கேரி பேக்) பைகளை பறிமுதல் செய்தனர். அரவக்குறிச்சி தாசில்தார் மகேந்திரன், மதுவிலக்கு துறை இன்ஸ்பெக்டர் சிவகாமி, அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், பொது சுகாதார மேற்பார்வையாளர் அருள் முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி