உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எள் அறுவடை பணி தீவிரம்

எள் அறுவடை பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: பஞ்சப்பட்டி பகுதியில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள்ளை அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, சுக்காம்பட்டி, போத்துரவூத்தன்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் எள் சாகுபடி செய்துள்ளனர். எள் செடிகளுக்கு, மழை மூலம் தண்ணீர் கிடைத்ததால், பசுமையாக வளர்ந்து பூக்கள் பிடித்து காய்கள் செடிகளில் பிடித்தது. தற்போது வெயில் அடிப்பதால் எள் செடிகளில் விளைந்த காய்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. விளைந்த எள் செடிகளை, விவசாயிகள் கூலி தொழிலாளர்கள் கொண்டு அறுவடை செய்து வருகின்றனர். எள் செடிகளில், பூச்சி பரவலை தடுக்கும் வகையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ