உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது

கரூர் : பள்ளி மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.கரூர் மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில், 12 வயது மாணவி 7ம் வகுப்பு படித்து வருகிறார். இளங்கோவன், 48, என்பவர் பள்ளி மாணவிக்கு கடந்த மே, 2ல் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். அவரது தாய், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்படி விசாரித்த போலீசார், போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து, இளங்கோவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி