உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி வங்கியில் பணம் கட்டியபோது 500 ரூபாய் கள்ள நோட்டு இருந்ததால் அதிர்ச்சி

அரவக்குறிச்சி வங்கியில் பணம் கட்டியபோது 500 ரூபாய் கள்ள நோட்டு இருந்ததால் அதிர்ச்சி

அரவக்குறிச்சி, 8கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில், வங்கியில் பணம் கட்டியபோது, 500 ரூபாய் நோட்டு இருந்ததால் இருதரப்பினரும் அதிர்ச்சியடைந்தனர்.கடந்த 20 நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டம், லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம் பகுதியில் இரண்டு, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில், அரவக்குறிச்சி டாஸ்மாக் கடையில் இருந்து வசூலாகும் பணம், அங்கு செயல்படும் வங்கியில் பணம் கட்டுவது வழக்கம். நேற்று வழக்கம்போல், டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை கட்ட, அரவக்குறிச்சி அரசு வங்கிக்கு ஊழியர்கள் சென்றனர். வங்கியில் பணத்தை எண்ணியபோது, ஒரு 500 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வங்கி கேஷியர் அந்த நோட்டை திரும்ப தரவில்லை.அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள மளிகை கடை, மருந்து கடை, ஜவுளி, மார்க்கெட், ஹோட்டல் என அனைத்து தரப்பிலிருந்தும் வரக்கூடிய மற்றும் பெறக்கூடிய, 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கவனத்துடன் கையாள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !