மேலும் செய்திகள்
புதர்மண்டிய வாய்க்கால் சுத்தம் செய்ய கோரிக்கை
16-Sep-2024
கரூர்: இரட்டை வாய்க்கால் கரையோர குடியிருப்பு வீடுகளில், பாம்புகள் படையெடுப்பதால், பொது-மக்கள் பீதியுடன் உள்ளனர்.கரூர் அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள, அமராவதி ஆற்றிலிருந்து இரட்டை வாய்க்கால் பிரிகிறது. இது கரூர் நகருக்குள், 12 கி.மீ., துாரம் பயணம் மேற்கொண்டு பாலம்மாள்புரத்தில் ஆற்றில் கலக்கிறது. வாய்க்காலில் செடி, கொடிகள் படர்ந்தும், பிளாஸ்டிக் குப்பை, ஆகா-யத்தாமரைகள் நிறைந்து கழிவுநீர் வாய்க்களாக மாறி விட்டது. நீண்ட நாட்களாக துார் வாரப்ப-டாமல் உள்ளதால், கரையோரங்களில் உள்ள குடியிருப்புகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்-டத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:இரட்டை வாய்க்கால்களில் ஹோட்டல் மற்றும் இறைச்சி கடைகளின் கழிவுகள் பெருமளவில் கொட்டப்பட்டு வருகிறது. நாய்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதுமட்டுமின்றி நீலி-மேடு, மக்கள் பாதை பகுதிகளில் பாம்புகள் நட-மாட்டம் உள்ளன. இவை கரையோரம் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு வாசிகள் தவிக்கின்றனர். செடிகள், கொடிகள் மண்டி கிடப்பதால் பாம்புகள் மட்டு-மின்றி, தேள், பூரான் போன்றவையும் வந்து விடுகிறது. இதுதவிர கொசுத்தொல்லையை பற்றி கேட்கவே வேண்டாம்.வாய்க்காலை குப்பை கொட்டும் இடமாக, மாநக-ராட்சி பணியாளர்கள் மாற்றி விட்டனர். பெரும்-பாலான இடங்களில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் என குப்பை கிடக்கிறது. கரையோரம் வசிப்ப-வர்கள் துாங்கி பல நாட்கள் ஆகிவிட்டது. கொசுக்கள் வாயிலாக மர்ம காய்ச்சலால் தவிக்-கின்றனர். உடனடியாக வாய்க்காலை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
16-Sep-2024