உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெருங்கும் தீபாவளி பண்டிகை ஜவஹர் பஜாரில் எஸ்.பி., ஆய்வு

நெருங்கும் தீபாவளி பண்டிகை ஜவஹர் பஜாரில் எஸ்.பி., ஆய்வு

கரூர்: தீபாவளி பண்டிகையையொட்டி, கரூர் ஜவஹர் பஜாரில், எஸ்.பி., ஜோஸ் தங்கையா, நேற்று இரவு ஆய்வு செய்தார்.நாடு முழுவதும் வரும், 20ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்காக, புத்தாடைகளை வாங்க, பொதுமக்கள் மார்க்கெட்டில் குவிந்து வருகின்றனர். கரூர் ஜவஹர் பஜாரில் ஜவுளி கடைகள், பாத்திர கடைகள், ஜூவல்லரிகள் உள்ளன. நேற்று விடுமுறை தினம் என்பதால், ஏராளமான பொதுமக்கள் புத்தாடைகள் உள்ளிட்ட, பொருட்களை வாங்க ஜவஹர் பஜாரில் குவிந்தனர். இதையடுத்து வரும், 20 வரை ஜவஹர் பஜாரில், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, நேற்று இரவு ஜோஸ் தங்கையா ஆய்வு செய்தார். அப்போது, கரூர் டவுன் போலீஸ் டி.எஸ்.பி., செல்வராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி