சிறப்பு பெற்ற கம்பம் நடும் விழா
கரூர் மாரியம்மன், நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள். இத்திருக்கோவில், 100 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் தோன்றியது. கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இருந்து, பிடிமண் எடுத்து வந்து இந்த கோவிலில் பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களால் தற்சமயம் உள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது, சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல உள்ள பெரியதொரு பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. வைகாசி பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.அம்மன் பிரசாதமாக வழங்கப்படும் திருமண்மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில், மறைவது பூமித்தாயின் வயிற்றில். எப்படித் தோன்றுகிறோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில், இந்த ஆலயத்தின் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே. மஞ்சள் நீர் கம்பம் உற்சவத்தின் போது, வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் சொருகப்பட்டு, ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலி பீடத்தின் அருகில் கம்பம் நடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி, சுவாமியாக நினைத்து வழிபடுகின்றனர். இதுவே மஞ்சள் நீர் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.21 நாட்கள் நடக்கும் வைகாசி விழாகரூர், மாரியம்மன் கோவிலில், வைகாசி பெருந்திருவிழா, 21 நாட்கள் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த திருவிழாவை தான் கரூரில் மிகப்பெரிய விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதுதவிர ஆடி வெள்ளி, நவராத்திரி,தீபாவளி, கார்த்திகை, பொங்கல், தை வெள்ளி, பங்குனி மாதத்தில் நடக்கும் கும்பாபிேஷக ஆண்டுவிழா, பங்குனி உத்திர திருவிழா ஆகிய நாட்களில், கரூர் மாரியம்மனை வழிபட மக்கள் பெருமளவில் வருவர்.