உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு

பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், திருவிழா பந்தம் விடும் நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று முன்தினம், பெருமாள் சுவாமியை வழிபடும் பக்தர்கள், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் புனித நீராடிவிட்டு, திருப்பதி வெங்கடாஜலபதி உருவபடத்தை எடுத்துக்கொண்டு, லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, கோவில் படம் வைத்து சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கொடிக்கால் தெருவை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி