தோகைமலையில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
குளித்தலை, குளித்தலை அடுத்த தோகைமலையில் நேற்று, நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார்.தோகைமலை யூனி யன் குழு முன்னாள் தலைவர் சுகந்திசசிகுமார், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவர் மூலமாக, பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குளித்தலை தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.. மாணிக்கம் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.குளித்தலை தாசில்தார் இந்துமதி, மாவட்ட பஞ்., உதவி இயக்குனர் சரவணன், எலும்பு முறிவு மருத்துவர் திவாகர், தமிழ்நாடு உரிமைகள் திட்ட அலுவலர் சுப்பையன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை சேர்ந்த விக்னேஷ், விஜயபாஸ்கர், கனகராஜ், மேகலா, ரேவதி, ராஜலிங்கம், சங்கர், மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.