மேலும் செய்திகள்
திருச்சாப்பூரில் உங்களுடன்ஸ்டாலின் திட்ட முகம்
02-Oct-2025
குளித்தலை, குளித்தலையில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், மாவட்ட மறுவாழ்வு துறை மூலம், தசை நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி சிறுவனுக்கு, நான்கு சக்கர பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது.குளித்தலை நகராட்சி சார்பில், அண்ணா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தாசில்தார் இந்துமதி தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் சகுந்தலா, நகராட்சி கமிஷனர் நந்தகுமார், மாவட்ட மறுவாழ்வு துறை அலுவலர் மோகன்ராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் பல்லவிராஜா, கவுன்சிலர்கள் சுகன்யா, சரவணன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். கரூர் மாவட்ட மறுவாழ்வு துறை சார்பில், பணிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி திலக் மகன் தேஜஸ், திருச்சி யில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். தசை நோயால் பாதிக்கப்பட்ட தேஜஸ்க்கு துறை சார்பில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் நான்கு சக்கர வாகனத்தை குளித்தலை தி.மு.க., எம்.எல்.ஏ., மாணிக்கம் வழங்கினார். துணை தாசில்தார் நீதிராஜன், தனி தாசில்தார்கள் மதியழகன், வெங்கடேஷ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
02-Oct-2025